Star16. CNN-IBN டிவியில் தமிழ் வலைப்பதிவுகள் பற்றி நான்
எனது மற்ற நட்சத்திர வாரப் பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
அவற்றை வாசித்த பின்னரே இப்பதிவைத் தொடர வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தினாலும் நீங்கள் அதைக் கேட்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியாதா என்ன ? சொல்றதை சொல்லி வைக்கலாம்னு தான் :))))
*****************************
ஒரு 3 மாதங்களுக்கு முன் தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய ஒரு நிகழ்ச்சிக்காக CNN-IBN நிருபர் ரஜினி ராம்கியை அணுக அவர் என்னை கை காட்டி விட்டு எஸ்கேப் ஆகி விட்டார். பேட்டியை சீக்கிரம் எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து தொலைபேசியில் என்னை அழைத்து அவசரப்படுத்தி, அந்த நிருபர் ஒரு மாலை வீட்டுக்கே வந்து CNN-IBN ஆபீசுக்கு அழைத்துச் (இழுத்துச்) சென்று ஒரு 10-12 நிமிடங்கள் பேட்டி எடுத்துக் கொண்டார். தமிழ் வலைப்பதிவுகளின் தோற்றம், வளர்ச்சி, பயன் -- இவை தான் பேட்டியின் சாராமசம். தமிழில் வலை பதிதல் பற்றி ஆங்கிலத்தில் உரையாட வேண்டியிருந்தது சற்று முரணாகத் தோன்றினாலும், தமிழில் நான் வலை பதிய ஆரம்பித்த சூழல், தமிழ்மணம் சேவை, தமிழில் தட்டச்ச உதவும் மென்பொருட்கள், தமிழ் வலைப்பதிவர்களின் ஆதரவுடன் செய்து வரும் சமூகப்பணி என்று பல தகவல்களை அப்பேட்டியில் பகிர்ந்து கொண்டேன்.
பேட்டி ஒளிபரப்பப்படும் தேதியையும் நேரத்தையும், எனக்குத் தொலைபேசிச் சொல்வதாகக் கூறிய நிருபர் கடைசியில் கவுத்து விட்டார். செப் 15-ஆம் தேதி காலையிலும், மாலையிலும் இருமுறை ஒளிபரப்பான அந்த CNN-IBN நிகழ்ச்சியை நானே பார்க்க முடியாமல் போனது! (ஆனால், அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப் போவதாக அறிவித்த CNN-IBN விளம்பரத்தில், தமிழ்மணத்தின் முகப்பு காட்டப்பட்டதை பார்க்கும் பாக்கியம் மட்டும் கிடைத்தது:)) ராம்கி தான் பார்த்ததாக அடுத்த நாள் ·போன் பண்ணிச் சொன்னார். அந்த CNN-IBN நிகழ்ச்சியின் ஒரு (மிகச்) சிறிய பகுதியை, IBNLIVE தளத்தில் உள்ள வீடியோவில் காணலாம். வீடியோவின் முதல் பாதி, இந்தியில் வலை பதிதல் பற்றி, அடுத்த பாதியில் (ஏதோ) கொஞ்சம் என்னைப் பார்க்கலாம் :)
நண்பர் சங்கரின் இந்தப் பதிவிலும் ஒரு சின்ன சைஸ் வீடியோவைப் பார்க்கலாம்!
CNN-IBN நிருபரிடம் அந்தப் பேட்டியை ஒரு குறுந்தகட்டில் இட்டு என்னிடம் தருமாறு கேட்டேன், இதுவரை தரவில்லை :(
என்றென்றும் அன்புடன்
பாலா
6 மறுமொழிகள்:
Test !
vAzththukkaL ....
//CNN-IBN நிருபரிடம் அந்தப் பேட்டியை ஒரு குறுந்தகட்டில் இட்டு என்னிடம் தருமாறு கேட்டேன், இதுவரை தரவில்லை :(//
செலவு பத்தி யோசிச்சிருப்பார். "நான் கொடுத்திடுறேன்"-னு சொல்லலாமில்ல...
//செலவு பத்தி யோசிச்சிருப்பார். "நான் கொடுத்திடுறேன்"-னு சொல்லலாமில்ல...
//
This is 3 MUCH :)))
வாழ்த்துக்கள் பாலா ....
அருமை
https://sankarsubramanian.blogspot.in/
Post a Comment